Posts

Showing posts from August, 2017

BARALIKADU ECO TOURISM ( பரளிகாடு - இன்ப ( திகில் ) சுற்றுலா )

Image
 பரளிகாடு இன்ப ( திகில் )  சுற்றுலா நாம் அனைவரும் குடும்பமாக பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்துள்ளோம். ஆனால் நிறைவு. சற்று குறைவே. மீண்டும் மீண்டும் தேடல்களாகவே உள்ளது. அவ்வாறு உள்ளவர்களுக்கு ஓர் இனிய செய்தி. காடு சார்ந்த இடமாக இருக்க வேண்டும். நீர் நிலைகள் உள்ள இடமாக இருக்க வேண்டும். நல்ல உணவு வேண்டும். குழந்தைகள் விளையாட இடம் வேண்டும். மேலும் ஆற்றில் குளித்து மகிழ வேண்டும். இவை அனைத்தும் ஒரே இடத்தில் வேண்டுமா. வாங்க போகலாம் பரளிகாடு.   கோவை மேட்டுபாளையம் அருகே அமைந்துள்ள பரளி என்கிற பகுதியில் அமைந்துள்ள வன பகுதி தான் பரளிகாடு. காரமடை வன சரகத்திற்கு உட்பட்ட இயற்கையான வனப்பகுதி அது. வன அலுவலகர் அனுமதி பெறாமல் யாரும் அங்கு செல்ல முடியாது. பரளிகாடு – சேலத்தில் இருந்து செல்பவர்கள் அவினாசி, அன்னூர், காரமடை வழியாக அல்லது பவானி, கோபி, சத்தி, பன்னாரி, காரமடை வழியாக சென்று அடையலாம். கோவையில் இருந்து செல்பவர்கள் சின்னதடாகம், ஆனைகட்டி வழியாக அல்லது சரவணம்பட்டி, காரமடை வழியாக சென்று அடையலாம். சரி. வன அலுவலரின் அனுமதிய...